ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி..! – T-20 போட்டியில் விராத் கோலி இல்லையே ஏன்?

490

இன்று வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் T-20 போட்டி நடைபெறுகிறது.

வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவது T-20 போட்டி இன்று டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

T-20 போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கேப்டன் விராட் கோலிக்கு டி-20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

T-20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிருனல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் தாகுத், ஷிவாம் தபே ஆகியோர் இடம்பெற்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of