“டி 20 கிரிக்கெட்” இந்தியாவிற்கு வரும் இலங்கை | T20 | India | Srilanka

315

அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தியா வந்து விளையாடுகிறது. தற்போது இலங்கை அணியும் இந்தியா வந்தால் போட்டி அட்டவணையை தயாரிக்க இந்தியாவுக்கு கடினமான நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஒரு வாரத்திற்குள் மூன்று போட்டிகளையும் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2017-ம் ஆண்டுக்குப்பின் இந்தியா – இலங்கை இடையில் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.