ரசிகர்களை கவர்ந்த டாப்சியின் வயதான தோற்றம்! புதுப்படத்திற்கு புதுகெட்டப்!

394

பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக அவர் அறுபது வயது பெண் தோற்றத்தில் நடிக்கிறார். தற்போது அவரது கதாபாத்திரத்தை விளக்கும் வகையிலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரகாஷி, சந்திரோ ஆகிய இரு துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக டாப்சி துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

டாப்சியின் தோற்றத்திற்காக ஹாலிவுட் படங்களுக்கு ஒப்பனைச் செய்யும் கலைஞர்கள் படத்தில் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் வறண்டக் கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of