குழாய தொறந்தா தண்ணீர் வராது.. நெருப்பு தான் வரும்.. இது நெருப்பு பூமி..

2493

இங்க குழாய தொறந்தா தண்ணி வராது.. ரத்தம் தான் வரும்.. இது ரத்த பூமி என்று வின்னர் படத்தில் வைகைப் புயல் வடிவேலு வசனம் ஒன்றை பேசியிருப்பார். இந்த வசனத்தைப் போன்றே ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.

சீனாவின் பன்ஜின் பகுதியில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் வென். இவர், அங்குள்ள குடியிருப்பு ஒன்றில், கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமைப்பதற்காக, தனது வீட்டுக் குழாயை திறந்துள்ளார்.

அப்போது, எதிர்பாரதவிதமாக, லைட்டரை அதன் கொண்டு வந்து எரிய வைத்துள்ளார். தண்ணீர் வந்துக்கொண்டிருந்த குழாயில், திடீரென நெருப்பு வர ஆரம்பித்துள்ளது. பின்னர், இதனை வீடியோவாக பதிவு செய்த அவர், இணையத்திலும் வெளியிட்டார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதையடுத்து, குழாயில் நெருப்பு எப்படி வந்தது என்று கண்டறியப்பட்டது. அதாவது, தண்ணீர் வரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதைப் போன்று, எரிவாயு வரத்திற்கும் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

அப்படி அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள்; ஏதோ ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தண்ணீரோடு, அந்த எரிவாயுவும் கசிந்துள்ளது. இதனால் தான் குழாயில் நெருப்பு வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Advertisement