தாமதமாக வழங்கப்படும் நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனில்லை

663

தாமதமாக வழங்கப்படும் நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி தகில் ரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் புதிய நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், வழக்கறிஞர்கள் குற்றப்பின்னணி இல்லாதவராகவும், வழக்காடுபவர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் மத்தியஸ்தராகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நீதிமன்றங்கள் கோவில் என்றும், வழக்கறிஞர்கள் தான் அதன் தூண்கள் எனவும் குறிப்பிட்டார். எனவே தூண்கள் இல்லாவிட்டால் கோவில்கள் இல்லை என்று கூறினார்.

மேலும் தாமதமாக வழங்கப்படும் நீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனில்லை எனவும் தலைமை நீதிபதி தகில் ரமணி பேசினார்.