மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்? வெளியான பரபரப்பு தகவல்!

593

பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட தேஜ்பகதூர் யாதவ் என்பவர் மனுதாக்கல் செய்தார். ராணுவத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டவர் ஆவார்.

அதிருப்தியில் இருந்த அவர் மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து மனுதாக்கல் செய்தார். அவரை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரித்து தனது கட்சி வேட்பாளராக அறிவித்தார்.

ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது தேஜ் பகதூர் யாதவ் 2 மனுவை தாக்கல் செய்து இருப்பது தெரிந்தது. அந்த 2 மனுக்களிலும் மாறுபட்ட தகவல்களை அவர் தெரிவித்து இருந்தார். இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்.

ஆனால் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இதனால் மோடியை எதிர்த்து போட்டியிடும் அவரது ஆசை நிறைவேறவில்லை. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு தேஜ்பகதூர் யாதவ் ரூ.50 கோடி பேரம் பேசும் காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தேஜ்பகதூர் யாதவ் கூறுகையில்,

‘நான் ராணுவத்தில் இருந்து 2016-ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். அதை எதிர்த்து ஜன்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினேன். அப்போது டெல்லி போலீஸ்காரர் ஒருவர் என்னை வீடியோவில் படம் பிடித்தார்.

அந்த வீடியோ காட்சிகள்தான் இவை. ஆனால் நான் பிரதமர் மோடியை கொல்ல தயார் என்று சொல்லவில்லை. அந்த வீடியோ திருத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இருந்தாலும் பா.ஜனதா தலைவர்கள் இது தொடர்பாக தேஜ்பகதூர் யாதவிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of