இயற்கையை அழிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் | Nilgiri | Social Activist

285

நீலகிரி மாவட்டத்தில் மரங்களை வெட்டிக்கடத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வளரக்கூடிய ஈட்டி, தேக்கு, பலா போன்ற மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆனால், கடந்த சில காலமாக வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பந்தலூர் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு, இரவாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல்துறை மற்றும் வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், மரக்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of