ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு – நடிகர் ரஜினி

239

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் அதனை தடுக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கள் மக்களின் வாழ்வாதரம் மற்றும் பொருளாதாரம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழை மக்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா துறையினர் என பல்வேறு அமைப்புகள் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பலர் தனது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாரட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கொரோனா தாக்கத்தை பற்றியும் சில கருத்துகளையும் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில், அடிப்பட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல, இது தற்போது தீராது. இதன் வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு நமக்கு வேதனைகளை தரும்.

உங்களது குடுமபத்தாரின் எல்லா தேவைகளை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்காதீர்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற செயல்களை செய்ய மறக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு..! என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of