சரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு- பியுஷ் கோயல்

142

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான பியுஷ் கோயல் கூறியதாவது:

ரயில்வே துறையில் பயணியருக்கு அதிக சலுகைகள் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

டில்லி – லக்னோ மும்பை – ஆமதாபாத் இடையே இயக்கப்படும் தேஜாஸ் ரயில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் பயணியருக்கு 100 ரூபாய் இழப்பீடு அளிக்கப்படுகிறது இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் 250 ரூபாய் இழப்பீடு அளிக்கப்படுகிறது.

இதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்திலும் திட்டமிட்டநேரத்தில் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை ஒப்படைக்கும் விதமான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

சரக்கு ரயில் போக்கு வரத்தில் நன்றாக வேலை செய்தால் ஊக்கத் தொகை அளிக்கவும் தாமதமான பணிக்கு அபராதம் விதிக்கும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of