தாம்பரம் – சானிடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்

1029

அண்மை காலமாக சிக்னல் கோளாறு, தண்டவாள விரிசல் போன்ற காரணங்களால் அடிக்கடி ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் – சானடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் தாம்பரம் – கடற்கரை இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குளாகி வருகின்றனர்.

Advertisement