இலங்கை போர் குற்றவாளிகளை காப்பற்றும் முயற்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் துணை போகாது

67897
shrikantha

இலங்கை போர் குற்றவாளிகளை காப்பற்றும் முயற்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் துணை போகாது என்று அதன் பொதுச் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதிகட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறுதிகட்ட போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சிறிகாந்தா, இலங்கை போர் குற்றவாளிகளை காப்பற்றும் முயற்சிக்கு தமிழீழ விடுதலை இயக்கம் துணை போகாது என்றார். மேலும் குற்றவாளிகளை காப்பற்ற அதிபரோ, பிரதமரோ துணை போனால் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.