மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சினிமா நடிகை ரியாமிகா

293

சென்னையில் இளம் சினிமா நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் திரை பிரபலங்கள் தற்கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அகோரி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ரியாமிகா, வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது தம்பியுடன் தங்கியிருந்த நடிகை ரியாமிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

riyamikka

தகவலறிந்து வந்த போலீசார் ரியாமிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட வாய்ப்புகள் இல்லாதது, காதலனுடன் ஏற்பட்ட தகராறு என மன உளைச்சலில் இருந்ததால், ரியாமிகா தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அண்மை காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.