ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் செல்லக்காரணம் ஏன்? – இராணுவ வீரரின் மனைவி சந்தேகம்

1052

இராணுவ வீரர்களை ஒரே நேரத்தில் 70 வாகனங்களில் அழைத்துச் செல்ல காரணம் ஏன் என புல்வாமா தாக்குதல் குறித்து பலியான தமிழக இராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி  சந்தேகம் எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்றத் தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் தனக்கு சந்தேகம் எழுப்புவதாகவும், மத்திய அரசு இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் பயங்கரவாத தாக்குதலில் பலியான இராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேனி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இராணுவ வீரரின் மனைவி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு 6 மாதம் மட்டுமே விடுமுறையில் தனது கணவர் வந்தார்.

தனது கணவர் வேலை குறித்து தன்னிடம் கூறியுள்ளார்.

கான்வாய் வாகனங்கள் 2 அல்லது 3 தான் செல்லும். அதுவும் 3 வாகனங்கள் காலையில் சென்றால் மற்ற வாகனங்கள் மதியமோ அல்லது இரவோ தான் செல்லும்.ஆனால் ஒரே நேரத்தில் 70 வாகனங்களில் கொண்டு 2500 வீரர்களை கொண்டு சென்றது ஏன் என மத்திய அரசு மீது சந்தேகம் எழுப்பினார்.

ஜம்மு கேம்பில் இருந்து 20 நாட்கள் வைத்திருந்து அழைத்துச் செல்லக்காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

தன்னைப்போன்று பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர்,இதற்கு மத்திய அரசு தகுந்த பதிலளிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of