“தலைவிக்காக” தமிழ் கற்கிறேன் – ஆனால் தமிழ் எளிமையான மொழி அல்ல..

375

2008ம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கங்கணா ரணாவத். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர் தமிழில் நடிக்கின்றார். விஜய் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தலைவி’. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பதை மட்டுமே படக்குழு இதுவரை உறுதிப்படுத்தியுள்ளது.

‘தலைவி’ படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப் பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல என்று தெரிவித்துள்ளார்.