தமிழ் மொழியே சிறந்தது – பன்வாரிலால் புரோஹித்

640

ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை விட தமிழ் மொழியே சிறந்தது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் பிறந்தநாள் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காந்தி தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட முறை சுற்றுப்பணம் மேற்கொண்டதாகவும், தமிழை கற்றுக்கொள்ள விரும்பிய அவர், தமிழ் புத்தகங்களை வாங்கிச் சென்றதாக கூறினார்.

ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை விட தமிழ் மொழியே சிறந்தது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். இனிய மாலை வணக்கம் என தமிழில் தொடங்கி இடையிடையே தமிழில் பேசிய ஆளுநர், இறுதியில் நன்றி என தமிழிலேயே முடித்தார்.

Advertisement