மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல்..!

273

தாய்மொழி தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து 1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகள் வீரவணக்கம் நாள் ஜனவரி 25-ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.


இவ்வாண்டும் இன்று மொழிப்போர் தியாகிநாள் தமிழர்கள் வாழும் பகுதிகளிளெல்லாம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கடலூர் மாவட்டம் – பெண்ணாடம் அருகிலுள்ள முருகன்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. முருகன் அவர்கள் தலைமையில் நடந்த நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழக இளைஞர் முன்னணி,

தமிழக மாணவர் முன்னணி, திருவள்ளுவர் தமிழர் மன்றம் ஆகிய அமைப்பினர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர் மொழிப்போர் ஈகியருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of