தமிழில் கடிதமா? – திட்டி தீர்க்கும் போஸ்ட் ஆபிஸ் அதிகாரி -வீடியோ ஆதாரம்

594

சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வியாசர்பாடியில் அஞ்சல்நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அஞ்சல் நிலையத்தில், கடந்த டிசம்பர் மாதம், தமிழில் முகவரி எழுதிய தபால்களைப் பெற முடியாது என அங்கு பணிபுரிவோர், பொதுமக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்

இதை கண்டும் காணாமல் பலர் சென்றாலும் சிலர் எதிர்த்துக் கேட்டுள்ளனர். ஆனால்,அவர்களுக்கு முறையான பதில் இல்லாமல், திட்டி வெளியேற்றியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில், தமிழில் எழுதமுடியாதா என்ற

நிலைக் கண்டு கொதிந்தெழுந்த வழக்கறிஞர் ஒருவர், அதிகாரப்பூர்வமாக புகார்

கொடுத்துள்ளார்.

புகாருக்கு வருத்தம் தெரிவித்து, அஞ்சல் துறை கடிதம் அனுப்பியுள்ளதே தவிர,

தவறுப் புரிந்தோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது