பிரபல தமிழ் பாடலாசிரியர் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

2333

“கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா, நான் கண்கள் மூட மாட்டேனடி கண்ணம்மா” என்ற எளிய நடையில், வரிகளை அள்ளித் தந்தவர் கவிஞர் முத்து விஜயன். இசையமைப்பாளர்கள் தான் ஆட்சி செய்வோம் என்று இருந்த காலத்தில், பாடலாசிரியர்களுக்கும் அதில் பங்கு உண்டு என்பதை வரிகள் மூலம் நிரூபித்த பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர்.

வைரமுத்து, வாலி போன்ற மிகப்பெரும் சூறாவளிகள் இருந்த போதிலும், தனக்கென தனி பாணி அமைத்து, வரிக்கேணியாய் பாடல்களை தந்த முத்து விஜயன், இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்ட இவர், பல முன்னணி நடிகர்கள் முதல் சிறு நடிகர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கு பாடல் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாகவே, மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு வந்த இவர், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.

இவர் பிரிந்தாளும், இவர் எழுதிய பாடல்கள், பூவில் தேனுள்ள வரையிலும், வானில் காற்றுள்ள வரையிலும், மாவில் ருசியுள்ள வரையிலும், உயிரில் பசியுள்ள வரையிலும் வாழும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of