தமிழ் பட நடிகைக்கு கத்திக் குத்து..! பரபரப்பு சம்பவம்..!

2100

மும்பையை சேர்ந்தவர் நடிகை மால்வி மல்கோத்ரா. உதான் என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரலமாகிய இவர், தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை மல்கோத்ராவிற்கு யோகேஷ் என்ற நபர் சமீபத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

அவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், திடீரென அவரிடம் பேசுவதை மல்கோத்ரா நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று இரவு 9 மணியளவில், மல்கோத்ராவை சந்தித்த யோகேஷ், தான் தயாரிப்பாளர் என்றும், தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதனால், இருவருக்கிடையேயும், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கடும் கோபமடைந்த யோகேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து, நடிகையை கடுமையாக தாக்கினார்.

இதில், படுகாயமடைந்த மல்கோத்ரா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், யோகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement