பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

4974

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் நீண்ட வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது. இதில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது.

இதனிடையே 7 பேர் விடுதலை தொடர்பாக வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், நளினி இருவரும் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

ஆளுநர், தமிழக அரசு, உள்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி 161விதியை பயன்படுத்தி தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement