சிறப்பு நிதியுதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

142

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி என ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார். இதற்கான கணக்கெடுப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தன.இதற்கிடையே அரசு இந்த திட்டத்தை தேர்தலை மனத்தில் கொண்டுதான் மக்களுக்கு இந்த நிதியை அரசு வழங்குவதாக எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தனர். அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

ஆனால், அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையில் முடியாது என கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இத்திட்டத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார்.