அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.2 ஆயிரம்- முதல்வர் அறிவிப்பு

1571

டெல்டா மக்களை உளுக்கி போட்ட கஜா புயலின் பாதிப்பு சொல்லில் அடங்காது, அந்த அளவிற்கு உயிர் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவுவதை விட பல தனியார் தொண்டு நிறுவனங்களும், பல பிரபலங்களிம், திரையுளகங்களும் உதவி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of