போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்குதல் – கே.எஸ்.அழகிரி

124

அதிமுக அரசு போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காவல்துறையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த வித காரணமும் இல்லாமல் காவல்துறையினர் நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தை ஒடுக்காவிட்டால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதற்காக, அதிமுக அரசு இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of