தமிழகத்தை தொடர்ந்து குளிரூட்டும் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

407

தமிழகத்தை தொடர்ந்து குளிரூட்டும் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சன்னாநல்லூர், நன்னிலம், மாங்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கவது நாளாக கனமழை பெய்தது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேங்கிக்கால், நல்லவன் பாளையம், நாயுடுமங்கலம். நார்த்தாம்பூண்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதேபோன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of