தமிழகத்தில் மூன்றாவது நாளாக 1000-க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

651

தமிழகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு 24,586 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் 10,558 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த 1,036 பேருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்தமாக 1,091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 536 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 197 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 806 பேருக்கும், செங்கல்பட்டில் 82 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement