தமிழகத்தில் டெங்கு; பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது – விஜயபாஸ்கர்

602

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு சுகாதாரத்துறை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அண்டை மாநிலங்கலில் இருந்து பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கம் அதிகளவில் வருவதால் மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் எந்தவித பீதியும், பயமும் கொள்ள வேண்டாம் என்றும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் 80 சதவீத தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை வழங்கினார்.