மக்களவை தேர்தல் தேதி தள்ளிப்போகுமா?

507

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக தேர்தல் அன்று மதுரையில் சித்திரை தேர் திருவிழா நடைபெறுகிறது.

சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

விழா பற்றி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தினீர்களா? எனவும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க, சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி மதுரையில் தேர்தல் தேதியை தள்ளி வைக்குமாறு நாளை மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of