திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைப்பு

439

திருவாரூர் இடைத்தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்த அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பி வைத்தார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதியில் நிவாரண பணிகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தன. இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டார். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தி அறிக்கை அளித்தார். இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அனுப்பியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of