பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம்

1041

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் 25 ஆண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், கே.எம்.ஜோசப், நவீன் சிங்கா அடங்கிய அமர்வு முன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அவர்களை விடுதலை செய்வதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் எனவும் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு அரசே பரிந்துரை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, 3 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தாங்களே முடிவெடுப்போம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of