அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் – கிரிஜா வைத்தியநாதன்

673

அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. இதற்கு வங்கி ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மீண்டும் இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற் வாய்ப்பு என்றும் இதனால் அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 8, 9 ஆகிய தினங்களில் அரசு ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுக்க கூடாது என்றும் அவ்வாறு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒப்பந்த பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு ஊழியர்களின் வருகை பதிவு தகவல்களை வழங்க வேண்டும் எனவும் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of