பி.எஸ்.என்.எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

528

ஆப்டிகல் பைபர் கேபிள் புதைத்ததற்கு வாடகை செலுத்துமாறு அனுப்பிய சுற்றறிக்கையை எதிர்த்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டில் தொலைத் தொடர்பு மற்றும் இணையதள சேவை மேம்பாட்டுக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆப்டிகல் பைபர் கேபிள்களை பதித்துள்ளது. இதற்கான வாடகையை செலுத்துமாறு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு நில நிர்வாகம் மற்றும் வருவாய் ஆணையர் கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கை அனுப்பினார்.

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் வாடகை கோர முடியாது என்பதால், வாடகை செலுத்துமாறு அனுப்பிய சுற்றறிக்கைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.