ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

177
supreme-court

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா குழுமம் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.

மேலும் இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்று கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here