ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்

304
balakrishnan

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்குவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மூவாயிரத்து மூன்று அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் அதற்கு தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

தங்கள் மீதுள்ள களங்கத்தை துடைக்கவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதாக கூறிய அவர், தன் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டுமே தவிர, மற்றவர் மீது புகார் கூறக்கூடாது எனவும் தெரிவித்தார்.