14-வது நிதிகுழுவில் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

719

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், 15-வது நிதிக்குழு உறுப்பினர்கள் என்.கே.சிங். அனூப் சிங், அசோக் லகரி, ரமேஷ் சந்த், அரவிந்த் மேத்தா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுக்கு தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 8 கோடி தமிழ்க மக்களின் எதிர்பார்ப்பை 15-வது நிதிக்குழு நிறைவேற்றும் என நம்புவதாக தெரிவித்தார். அண்மைக் காலமாக தமிழகத்திற்கான நிதி பகிர்வு பெருமளவில் குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நிதி ஒதுக்கக்கூடாது என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி,மத்திய அரசின் திட்டங்களுக்கு மானியம் குறைக்கப்படுவது கவலை அளிப்பதாக இருக்கிறது எனவும் கூறினார்.

Advertisement