தமிழக அரசின் அதிரடி…, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…, மக்களவை தேர்தலை முன்னிட்டா?

906

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

 • ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 • இவரைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்.
 • மேலும், பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம்.
 • கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிரவாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமானம் செய்யப்பட்டுள்ளார்.
 • சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
 • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 • திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, கோவை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 • திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவாரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 • தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் திருவாரூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 • நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 • கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of