நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக தமிழகம் முதலிடம்

293

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக தமிழகம் முதலிடமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது.

புதுடில்லியில் இன்று 9 வது உடல் உறுப்பு தான விழா நடைபெற்றது, உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பெற்றமைக்கான விருதை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பெற்று கொண்டார், இந்த விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வின் குமார் வழங்கினார், உடல் உறுப்பு தான விருதில் தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாக முதல் இடத்திற்கான விருது பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.