ஊரடங்கை மீறிய திருமணம்.. விருந்துக்கு காத்திருந்த விருந்தாளிகள்

455

கொரோனா பரவல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்திலும் சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா அதிகரித்த இடங்களில் பொதுமுடக்கமும் கொரோனா குறைவான இடங்களில் சில தளர்வுகளும் அரசு விதித்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் அருகே ஊரடங்கை மீறி எந்தவொரு அனுமதியும் பெறாமல் திருமணம் ஒன்று நடைபெற்றது.

அதில் முகக்கவசம் அணியாமல் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருமணத்தை முடித்து உணவுக்காக காத்திருந்த அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறித்தனர்.

பின்பு இருவீட்டார் பொற்றோர்களிடமும், திருமண மண்டப உரிமையாளரையும் எச்சரித்து திருமணத்தை தலமை தாங்கி நடத்திய 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of