மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது

785

பாலமேடு பொது மகாலிங்கம் சாமி மடத்து கமிட்டி சார்பாக இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில், 846 மாடுபிடி வீரர்களும் 988 காளைகளும் பங்கேற்றுள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கடந்த 5 ஆம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணிக்கு முடிவடைகிறது.

போட்டி நடக்கும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 12 மருத்துவ குழு மற்றும் ஒரு அறுவை சிகிச்சை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பன்னிரெண்டு அவசர ஊர்திகளும், கால்நடை அவசர ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போடியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

மேலும் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்னன் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் பாலமேடு பகுதி முழுவதும் திருவிழா போல் காட்சியளிக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of