தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு..!

211

அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க சார்பில் தொ.மு.ச பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போன்று அ.தி.மு.க சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிதாக தேர்ந்த்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of