935 கோடியுடன் முதலிடத்தை பிடித்தது தமிழ்நாடு – தேர்தல் ஆணையம்

509

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கம், பரிசுப்பொருட்கள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏப்ரல் 24-ம் தேதி வரை நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ.3152.54 கோடி ஆகும்.

அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.214.95 கோடி பணம், ரூ.708.69 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3.54 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.38 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.8.13 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

#LokSabhaElections2019 #ElectionFlyingSquad #CashSeizure

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of