“இவருக்கு தான் ஓட்டு போடனும்..” தமிழர்களை பயங்கரமாக தாக்கிய சிங்களர்கள்..! அதிபர் தேர்தலில் பரபரப்பு..!

869

இலங்கையின் கேகாலை மாவட்டம் தெரணியாகல பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வாக்களித்துச் சென்றனர். அப்போது ஒரு தரப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சில நபர்கள் வாக்காளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

அதையும் மீறி தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குள் புகுந்த சிங்களர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்ததாக கூறி தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த நபர் வெட்டுக்காயங்களுடன் தெரணியாகலவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.