பிரித்து விட்டீர்களே- வைரமுத்துதாசன்!! கவிதை!!

193

பிரித்து விட்டீர்களே

கால்கள் நீட்டி
உறங்கவும் இடமில்லை
கைகள் கட்டி
கதைக் கேட்கவும் முடியவில்லை

ஓரிடத்தில்
தனியே
அமைதியாய் இருக்கிறேன்
இருந்த இடத்திலேயே
உணவை பெறுகிறேன்

உலகிலேயே
இது தான் சிறந்த வகுப்பறை
இங்கே கற்பது தான்
கட்டையில் போகும் வரை

இங்கிருந்து போக
வரவில்லை மணம்
இங்கே இருக்கக்
கடவுள் கொடுத்ததோ முந்நூறு தினம்

என்னை இங்கிருந்து பிரிக்க விட்டார்கள்

பிரித்ததால் கதறி அழுகிறேன்
ஒருவர் சிரித்துக் கொண்டு வருகிறார்

ஏதேதோ செய்ய உருள்கிறது காலம்
நினைவு வந்ததும் தான் தெரிகிறது

அன்று சிரித்தது தந்தை
நான் இருந்தது தாயின் கருவரை என்று

– வைரமுத்துதாசன்