பாரதியார் தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் – மோடி

2863

நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன் தான் நம் மீசை கவிஞ்சன் பாரதி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கதியவன் தான் நம் தேசிய கவிஞன்.

ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் இருந்தவர். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான்.

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான். இப்படிப்பட்ட கவிஞனின் பிறந்த நாள் தான் இன்று.

டுவிட்டர் பக்கத்தில் பாரதியார் என்ற ஹேஸ்டெக் வைரலாகி கொண்டு வருகிறது. அவரவர் பாரதியார் பற்றி தனக்கு தெரிந்த கருத்துகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றன.

மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பல பேர் வாழ்த்துகள் கூறும் விதமாக கருத்துகளை பதிவிட்டு கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் பிரதமர் மோடியும்  பாரதியார் பற்றி தமிழ் மொழியில் தனது கருத்துகளை  டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

Advertisement