மூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha

705

1999ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் அறிமுகமாகி ஏறத்தாழ 20 ஆண்டுகளாக திரையுலகில் முடிசூடா நாயகியாக திகழ்பவர் திரிஷா, லேசா லேசா, சாமி தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

சில ஆண்டுகளாக படங்களில் கவனம் செலுத்தாத திரிஷா, கடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்திற்கு பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்தார். அவர் தமிழில் நாயகியாக நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளார் என்கிறார்கள். ஒரே சமயத்தில் மூனறு மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of