UPSC தேர்வில் தேசிய அளவில் இடம்பிடித்த தமிழர்

280

இன்று வெளியான யு.பி.எஸ்.சி இறுதித்தேர்வு முடிவில், நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர், தேசிய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் IAS, IPS உள்ளிட்ட இந்திய குடிமைபணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 2020 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை ஆளுமை திறன் குறித்த நேர்முக தேர்வுகளும் நடத்தப்பட்டன.

அவற்றின் அடிப்படையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. 829 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதீப் சிங் என்பவர் தேசிய அளவில் முதல் இடத்தையும் ஜேட்டின் கிஷோர் மற்றும் பிரதீபா வர்மா ஆகியோர் 2 மற்றும் 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர், தேசிய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

Advertisement