Tik Tok-க்கிற்கு Get Out.. சில் 5-க்கு கட் அவுட்.. – புதுசா வந்த தமிழ் ஆப்

618

இந்தியா-சீனா எல்லை பதற்றம் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே நேரத்தில் டிக்-டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.

இதனிடையே, டிக்-டாக் செயலிக்கு ஈடாக மாற்று செயலியை உருவாக்க பல நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஐந்து பேர் இணைந்து, டிக்-டாக்கிற்கு மாற்றாக சில் 5 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த செயலி, வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்களை கொண்டுள்ளதாகவும், இந்த செயலிக்கான சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதால், தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் எனவும் செயலியை உருவாக்கிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.