தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது… வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு

540

கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்படாது என்று  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசு எதிர்ப்பு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், 5,912 கோடி ரூபாய் செலவில்  66 டி.எம்.சி கொள்ளளவு உடைய புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது  கர்நாடகா அரசு.  இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ்  மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்றும்.

கர்நாடக அரசு அணைகட்டும் பணியை  தொடங்கவில்லை என்றால்  வரும் 27ம் தேதி  தாங்களே அடிக்கல்  நாட்டுவோம் என்றும். மேகதாது விவகாரத்தில், தமிழக முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.