டிக்டாக் தடையா? அதை செய்ங்க முதல்ல..- ரொம்ப கலாய்க்கிறாங்க.. தமிழிசை வேதனை

487

டிக்டாக் APP-ஐ தடை செய்தால் அதை வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

டிக்டாக் APP ஐ தடை செய்யவேண்டும் என நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். டிக்டாக் APP இல் ஆபாச நடனங்கள் ஆடுவதால் இளம் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் எனவே தமிழகத்தில் டிக்டாக் APP ஐ தடை செய்யவேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் பேசும்பொழுது டிக்டாக் ஆப் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தான் என தெரிவித்தார். ப்ளூ வேல் கேமை தடை செய்தது போல டிக்டாக் APP-ம் தடை செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில், தமிழகத்தில் டிக்டாக் APP ஐ தடை செய்தால் அதை வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன் என தெரிவித்தார்.

tamilisai troll

டிக்டாக் APP-ல் என்னையும் கடுமையாக விமர்சித்து வெளியிடுகிறார்கள் என வேதனை தெரிவித்த தமிழிசை, டிக்டாக்-ஐ தடை செய்யவேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of