பிரதமர் மோடியை விமர்சனம் செய்வது இந்த போகியோடு போகட்டும் – தமிழிசை

215

தமிழகத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வது, இந்த போகியோடு போகட்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சி நிர்வாகிகளுடன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது, தமிழர்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், வாள் சண்டை, மான்கொம்பு, சிலம்பாட்டம் என கைலாய வாத்தியம் முழங்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழகத்தில் பிரதமரை விமர்சனம் செய்வது இந்த போகியோடு போக வேண்டும் என தெரிவித்தார். நாளை முதல் பாஜக பலம் பொருந்திய கட்சி என்பதை நிரூபிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.