மக்கள் டோக்கனை வைத்துக்கொண்டு டிடிவியை தேடுகின்றனர்.., தமிழிசை

797

சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளசாவில், அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,

அதிமுகவின் வாக்குகளை, அமமுகவால் பிரிக்க வாய்ப்பே இல்லை என்றும், பாமக, தேமுதிக தொகுதி உடன்பாடு முன்பே முடிந்து கையெழுத்தாகியுள்ளதால், இன்று நடைபெற்ற தொகுதி அறிவிப்பு நிகழ்வில் அக்கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லை என்றார்.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர்கள் கூட்டத்திற்கு பின், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் போட்டியிடுவதாக கூறிவரும் டிடிவி. தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையாக, உங்களை ஆர்.கே.நகர் மக்கள், டோக்கன்களை வைத்துக் கொண்டு டிடிவி தினகரனை தேடிக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடு வளர்ச்சி அடையாததற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய தமிழிசை, கல்லூரி மாணவிகள் தன்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என ராகுல் காந்தி கூறியதை பெருமையாக பேசும் திமுக கூட்டணியினர், ஸ்டாலினை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisement